விருதுநகர்: கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த 30.04.2021 அன்று உயிரிழந்த விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் 596 கனிமுத்து என்பவருக்கு, மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண தொகை 25,00,000 காசோலையை அவரது குடும்பத்தாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் இ.கா.பா அவர்கள் இன்று வழங்கினார்.