திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.மோகன், வாகன விபத்தில் இறந்த நிலையில் அவருக்கு, தமிழக அரசு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மாதாந்திர ஊதியத்தை பெறும் அரசு ஊழியர்கள் பணிக்காலத்தில் விபத்து போன்ற நிகழ்வுகளில் ஏற்படும் இறப்பு மற்றும் காயங்களின் தன்மைக்கேற்ற ரூபாய் 1 கோடி வரை காப்பீடு வழங்கும் திட்டம் மூலம் அவருக்கு SBI வங்கி விபத்துக்காப்பீடு அடிப்படையில் ரூபாய் 1 கோடிக்கான காப்பீட்டுத்தொகையை (24.12.2025) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு. கரூண் கரட், இ.கா.ப., அவர்கள் மேற்படி இறந்த திரு.மோகனின் குடும்பத்தினரை நேரில் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்கள்.
















