சிவகங்கை: திருப்பத்தூர் சரகம் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் திரு. முருகேசன் அவர்கள் 14.07.2019 அன்று சாலை விபத்தில் மரணமடைந்தார். அவர் தல்லாகுளம் பாரத ஸ்டேட் வங்கியில் தனது சம்பள கணக்கில் (salary package) பணம் பரிமாற்றம் செய்து வந்தார். விபத்தில் மரணமடைந்த காவலர் குடும்பத்திற்கு United India insurance கம்பெனியிடமிருந்து நிவாரண தொகையாக Rs.30 லட்சம் காசோலையை இன்று சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோகித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் பெற்றுத் தந்தார். மேலும் வங்கி மேலாளர் மற்றும் ஆய்வாளர் அன்னலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்