தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் மோகன். இவர் கடந்த மாதம் 29ம் தேதி மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார்.
இவர் கடந்த 2003ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார் இதே ஆண்டில் இவருடன் பணியில் சேர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் காவலர்கள் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு அனைவரின் பங்களிப்பும் தொகையாக ரூபாய் இரண்டு லட்சம் வழங்கியுள்ளனர்.
உயிரிழந்த மோகனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் இத்தொகை குழந்தைகளுக்கு கல்வி செலவிற்காக உதவிகரமாக அமையும் என சக காவலர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் ஒன்றிணைந்து உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.