திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்த திரு.பால சுப்பிரமணி அவர்கள் (24.12.2021) அன்று இரவு கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இந்நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களும், மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.லாவண்யா அவர்களும், இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு இறந்த தெய்வத்திரு.பால சுப்பிரமணியை தங்கள் தோள்களில் சுமந்து சென்று காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா