திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஐ.வாடிப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் திரு.நாட்டு துறை இவர் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த மாதம் மரணம் அடைந்தார்.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அவருடன் 2009 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதும் உள்ள போலீசார் நிதி திரட்டி, நாட்டு துறையின் மகள் வங்கி கணக்கில் ரூபாய் 25 லட்சம் பணத்தை டெபாசிட் தொகையாக செலுத்தியுள்ளனர்.
போலீசாரின் இந்த மனிதாபிமான செயல் காவலர்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்து தரப்பினர் இடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.