கோவை: கோவை மாநகர ஆயுதப்படை தலைமை காவலர் திரு.பேச்சிமுத்து அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு 2003 பேர்ச் தலைமை காவலர்கள் திரு.லிங்கம், திரு.ஆசைத்தம்பி, திரு.பூதலிங்கம், திரு.பரமசிவம் மற்றும் திரு.மணிகண்டன் ஆகியோர் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி சேர்ந்த 2003 பேர்ச் காவலர்களிடம் நிதி திரட்டி 1,08,500/- ரூபாயை மறைந்த காவலர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அர்பணிப்புடன் செயல்பட்டு, உயிரிழக்கும் காவலர்களின் குடுபத்திற்கு, சக காவலர்களின் உதவி கரம், உயிர் நீத்த காவலரின் ஆன்மாவிற்கு இளைப்பாறுதல் தரும் என்பதில் ஐயமில்லை.
கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்