பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகை நாட்களில் பொதுமக்கள் பண்டிகை கொண்டாட தேவையான பொருட்கள் வாங்க நகரங்களிலும் முக்கிய இடங்களிலும் அதிகமாக கூடுவதால் அங்கு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையின் மூலம் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் அதிகப்படியான நகைகளை அணிந்து வர வேண்டாம் எனவும், தெரியாத நபர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏதேனும் இனிப்பு கொடுத்தால் அதனை சாப்பிட வேண்டாம் எனவும், பேருந்தில் பயணம் செய்யும் போது தங்களது உடைமைகளை கையில் வைத்துக் கொள்ளுமாறும் காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்கிறோம். மேலும் அவசர உதவி மற்றும் பாதுகாப்பிற்கு பொதுமக்கள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 தொடர்பு கொள்ளுங்கள். இந்த தீபாவளி பண்டிகையானது பொதுமக்கள் எவ்வித அச்சமின்றியும், குற்றமில்லாத பண்டிகையாக கொண்டாட காவல்துறை சார்பாக அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் நடைப்பெற்று வருகின்றது. எனவே பொது மக்கள் நமது காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.