விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வளத்தியை அடுத்த கலிங்கமலை கிராமத்தில் உயர்மின் கோபுரத்தில் ஏறி விவசாயி ஒருவர் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி திரு.ராபின் கேஸ்ட்ரோ அவர்கள் மேல்மலையனூர் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் குழுவுடன் சேர்ந்து
பிரபாகரன் மற்றும் சிவகுமார் ஆகிய தீயணைப்பு வீரர்கள் மூலம் சுமார் 180 அடி உயரமுள்ள உயர்மின் கோபுரத்திலிருந்து இறந்துபோன கலிங்கமலை கிராமத்தை சேர்ந்த மணி வயது 55 என்பவரின் சடலத்தை பாதுகாப்பாக கீழிறக்கி பிரேதத்தை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்கணிப்பாளர் திரு ஸ்ரீநாதா.IPS அவர்கள் நேரில் சென்று விசாரணை மேர்ற்கொண்டார்.
உடன் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோவிந்தராஜி மற்றும் திண்டிவனம் துணை ஆட்சியர் திரு.அமித் ஆகியோர்கள் இருந்தனர்.
இச்சம்பவம் குறித்து வளத்தி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.