திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்டம் உமராபாத் காவல் நிலையத்தை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., அவர்கள் (25.11.2025) நேரில் பார்வையிட்டார். மேலும் காவல் நிலையத்தில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் பற்றியும் காவல்துறையினர் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரைகளை வழங்கினார்.
















