தஞ்சாவூர் மாவட்டம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பிள்ளைகள், உறவினர்கள் என யாரும் இன்றி ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வரும் கணவன் மற்றும் மனைவி என இரண்டு முதியோர்களுக்கு வீட்டு வாடகை உதவியாக உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் மற்றும் நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா சார்பாக பணம் வழங்கப்பட்டது.
சென்னை: சென்னை ஆவடியில் கறிக்கடையில் வேலைபார்க்கக்கூடிய சகோதரர் ரோடு கிராஸ் பண்ணும் போது விபத்து ஏற்ப்பட்டு இடது கால் முட்டியில் எலும்பு முறிவு ஏற்ப்பட்டு புத்தூர் கட்டு போட்டு சிகிச்சை பெறுகிறார். அவருக்கு மருத்துவ உதவியாக உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் மற்றும் நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா சார்பாக பணம் வழங்கப்பட்டது.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ. சார்லஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி , நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா சமூக சேவை பிரிவு வடக்கு மண்டல பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா ஒருங்கிணைப்பு செய்து இருந்தார்.
















