தருமபுரி: தருமபுரிமாவட்டத்தில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு இரண்டு பெண் காவலர்கள் என நியமிக்கப்பட்டு “மகளிர் மற்றும் குழந்தைகள் உதவி மையம்” தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. கலைச்செல்வன். இ.கா.ப., அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை மற்றும் இந்தியன் வங்கி ஆகிய இடங்களில் பெண்களுக்கு, பென்னாகரம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. லதா அவர்களின் தலைமையில் மகளிர் மற்றும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள், அதற்கான தீர்வு, உதவிக்கு அணுக வேண்டிய உதவி எண்கள் 181 & 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் பிரச்சினைகள் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தால் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தின் மூலம் தீர்வு காணப்படும் எனவும் மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.