பசி தீர உணவளித்தாய்..
உயிர் தாகம் போக்க நீரளித்தாய்..
தளர்ந்த அன்னையை
தாங்கிட …
உன் கரம் கொடுத்தாய்..
அவள் களைத்த மனம்
ஒய்வு பெற மடி கொடுத்தாய்..
அன்னையாய் அரவனைக்கும் அன்பு காவலர்….
உங்களை வணங்கி மகிழ்கிறோம்.
சாலையோரத்தில் படுத்த படுக்கையாக இருந்த ஆதரவற்ற வயதான முதியவருக்கு உணவளித்து கரம் கொடுத்த காவலர் (Gr.I-PC 101) திரு.மோகன்ராஜ் அவர்களை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனன் அவர்கள் நினைவுபரிசினை வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்