சேலம் : சேலம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள காவல் உதவி ஆய்வாளர், (தாலுகா ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) பதவிகளுக்கான பொதுத்தேர்வு 2023 – க்கு இணையம் வாயிலாக விண்ணப்பிக்க வழி காட்டவும் சந்தேகங்களை தெளிவுபடுத்தவும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்களின் உத்தரவுப்படி மாவட்ட காவல் அலுவலகத்தில் உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பது சம்பந்தமான உதவி வேண்டுகோள் நேரடியாகவோ அல்லது 94459 – 78599 என்ற தொலைபேசி வாயிலாக (1/06/2023) முதல் (30/6/2023), வரை காலை 9.30 மணி முதல் மாலை 6:00 மணி வரை உதவி மையத்தை நாடலாம்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்