பஞ்சாப் : பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் திரு.ஹர்ஜித் சிங் அவர்கள் காய்கறி சந்தையில் நடந்த தாக்குதலின் போது அரிவாளால் வெட்டப்பட்டார். உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு மேற்கொள்ளப்பட்டு கை மீண்டும் பொருத்தப்பட்டது. உதவி ஆய்வாளரை பெருமைபடுத்தும் விதமாக பஞ்சாப் மாநில காவல்துறை இயக்குநர் திரு. தின்கர் குப்தா¸ இ.கா.ப அவர்கள்¸ திரு.ஹர்ஜித் சிங் அவரின் பெயரை பலகையை அணிந்து கொண்டார்.