திருச்சி : கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், திருச்சி மாநகர போலீசாருடன் இணைந்து களப்பணி ஆற்றும் ஊர்க்காவல் படையினர், தன்னார்வலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அவர்களது பணியை பாராட்டியும், ஊக்குவிக்கும் வகையிலும் நபர் ஒருவருக்கு 1,000 ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை GH காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் தனது சொந்த நிதியில் வழங்கியுள்ளார். இச்செயலை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.