கோவை : கோவை மாவட்ட முன்னாள் காவல்துறை அதிகாரிகள் நல அறக்கட்டளையின் சார்பாகவும் மற்றும் ஈரோடு சக்தி தேவி நல அறக்கட்டளையின் சார்பாகவும் காவல்துறையினரின் குடும்பத்தைச் சார்ந்த மாணவ/மாணவியர்களுக்கு இன்று உதவித்தொகை வழங்கப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் பள்ளி மேல்நிலைப்படிப்பினை முடித்து கல்லூரியில் சேரும் காவல்துறையினரின் குடும்பத்தைச் சார்ந்த மாணவ/மாணவியர்களுக்கு, இவ்விரு அறக்கட்டளையின்
சார்பாக உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனில், ஈரோடு சக்தி தேவி நல அறக்கட்டளையின் சார்பாக ரூபாய் 10000 உதவித்தொகையும்,
கோவை மாவட்ட முன்னாள் காவல்துறை அதிகாரிகள் நல அறக்கட்டளையின் சார்பாக ரூபாய் 5000 உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடச்சியாக 2019 – 2020 ஆம் ஆண்டு பள்ளி மேல்நிலைப்படிப்பினை முடித்து கல்லூரில் சேர்ந்து பயின்றுவரும் காவல்துறையினரின் குடும்பத்தைச் சார்ந்த மாணவ/மாணவியர்களுக்குஉதவித்தொகை வழங்கிய விழாவானது, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவினில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் K. திரு பெரியய்யா., I.P.S அவர்கள், கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் திரு K.S. நரேந்திரன் நாயர்., I.P.S அவர்கள் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. Ara. அருளரசு., I.P.S அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மேலும், இவ்விழாவினில் கோவை மாவட்ட முன்னாள் காவல்துறை அதிகாரிகள் நல அறக்கட்டளையின் சார்பாக, கோவை பி.ஆர்.எஸ். வளாகத்தில் செயல்பட்டுவரும் மத்திய/மாநிலத் தேர்விற்கான இலவசப் பயிற்சிமையத்தில் வழங்கப்பட்டு வருகின்ற இலவசப் பயிற்சிகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. இங்கு வழங்கப்படுகின்ற பயிற்சிகள் மற்றும் தேர்வுகள் பற்றி இங்கு பயின்று வரும் மாணவியான செல்வி.ஜெயரவினா அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தார்.
இவ்விழாவினில், காவல்துறையினைச் சார்ந்த உயர் அதிகாரிகள், நல அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் மாணவ/ மாணவியர்கள், அவர்களது பெற்றோர்கள் உட்பட மொத்தம் 40 நபர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்