சென்னை: தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ் கே பிரபாகர் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது
சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையர் திரு.குமார் தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப் படுகிறார்
சென்னை சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளராக உள்ள திரு.எம் ஆர் சிபி சக்கரவர்த்தி தாம்பரம் சட்டமன்ற துணை ஆணையராக நியமிக்கப் படுகிறார்
சென்னை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் திரு.ராமமூர்த்தி தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக துணை ஆணையராக பொறுப்பு ஏற்க உள்ளார்
சென்னை மதுவிலக்கு தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக உள்ள திருமதி.ஜி சுப்புலட்சுமி தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
அம்பத்தூர் அம்பத்தூர் துணை ஆணையர் திரு.ஜே மகேஷ் ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப் படுகிறார்
சென்னை மேற்கு போக்குவரத்து துணை ஆணையர் திரு.எம்எம் அசோக்குமார் ஆவடி போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
சென்னை அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு.பி பெருமாள் ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக பொறுப்பு ஏற்க உள்ளார்
கோவைப்புதூர் பட்டாலியன் கமாண்டன்ட் திரு.உமையால் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக நிர்வாகம் துணை ஆணையராக நியமிக்கப் படுகிறார்.
மதுரை அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ் எஸ் மகேஸ்வரன் சென்னை அமலாக்கப்பிரிவு
காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்க உள்ளார்.
அண்ணாநகர் துணை ஆணையர் திரு.தீபா கனிஷ்கர் டெல்லி பட்டாலியன் கமாண்டன்ட் ஆக பதவி ஏற்க உள்ளார்
டெல்லி பட்டாலியன் கமெண்ட் அண்ட்திரு. டி.செந்தில்குமார் கோவைப்புதூர் பட்டாலியன் கமெண்ட் பொறுப்பை ஏற்க உள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலக நிர்வாகம் துணை ஆணையர் திரு.பி மகேந்திரன் அடையார் துணை ஆணையராகவும்
சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையர் திரு.பிரதீப் பரங்கிமலை துணை ஆணையராக பொறுப்பை ஏற்க உள்ளனர்.
வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் ஆர் சிவபிரசாத் அண்ணாநகர் துணை ஆணையராகவும்
பரங்கிமலை துணை ஆணையர் திரு.அருண் பாலகோபாலன் சென்னை சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் திரு.தி.பாலசுப்பிரமணியன் சென்னை உளவுப்பிரிவு துணை ஆணையராகவும் பொறுப்பு ஏற்க உள்ளார்கள்.
வேலூர் சரக உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
