பழனி: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து இதனால் தமிழகத்தில் முழுஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பழனி பேருந்து நிலையத்தில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் உணவின்றி தவிப்பதாக திண்டுக்கல் சரக டிஐஜி முத்துச்சாமிக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் தன்னார்வலர்கள் மூலம் சாப்பாடு பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு, பேருந்து நிலையத்திலிருந்த தங்கியிருந்த ஆதரவற்றவர்கள் அனைவருக்கும் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி உணவு பொட்டலங்களை வழங்கினார். மேலும் பழனி நகர்பகுதிகளில் முழுஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது முழுஊரடங்கு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் அத்தியாவசியமின்றி சுற்றி வந்தவர்களை எச்சரித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா