விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள், அவர்களுக்கு உதவியாக உடன் இருப்பவர்கள், தூய்மை பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு உணவுகள் கிடைப்பதில் கடுமையான சிரமம் இருந்து வருகிறது. இதனையறிந்த ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் தலைவர் ராமராஜ் மற்றும் நிர்வாகிகள், பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவுகள், பழங்கள், ரொட்டி வகைகள் கொடுக்க முடிவு செய்தனர். இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் தெய்வம் மற்றும் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியில், நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் போலீசாரும் இணைந்து கொண்டனர். ராஜபாளையத்தின் முக்கிய வீதிகள், சிவகாமிபுரம் தெரு, சங்கரபாண்டியபுரம் தெரு பகுதிகளில் உள்ள நெசவாளர்கள், ஆவாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார்ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, உணவு பொட்டலங்கள், பழங்கள், ரொட்டி பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. பசிக்கு உணவு வழங்கிய நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கும், காவல்துறையினருக்கும் அனைவரும் மனதார நன்றி தெரிவித்தனர். ஆய்வாளர் தெய்வம், ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜுவிற்கு பாராட்டு தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள், அவர்களுக்கு உதவியாக உடன் இருப்பவர்கள், தூய்மை பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு உணவுகள் கிடைப்பதில் கடுமையான சிரமம் இருந்து வருகிறது.
இதனையறிந்த ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் தலைவர் ராமராஜ் மற்றும் நிர்வாகிகள், பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவுகள், பழங்கள், ரொட்டி வகைகள் கொடுக்க முடிவு செய்தனர். இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் தெய்வம் மற்றும் போலீசாரிடம் அனுமதி கேட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியில், நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் போலீசாரும் இணைந்து கொண்டனர். ராஜபாளையத்தின் முக்கிய வீதிகள், சிவகாமிபுரம் தெரு, சங்கரபாண்டியபுரம் தெரு பகுதிகளில் உள்ள நெசவாளர்கள், ஆவாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, உணவு பொட்டலங்கள், பழங்கள், ரொட்டி பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. பசிக்கு உணவு வழங்கிய நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கும், காவல்துறையினருக்கும் அனைவரும் மனதார நன்றி தெரிவித்தனர். ஆய்வாளர் தெய்வம், ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜுவிற்கு பாராட்டு தெரிவித்தார்.