சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திண்டுக்கல் சாலை, பேருந்துநிலையம் முன்பகுதி, நான்குமுனை சந்திப்பு சாலை, பெரியகடைவீதி ஆகிய பகுதிகளில் சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையில் சிங்கம்புணரி உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஸ்குமார், ஆகியோர் கொண்ட குழு நேற்று முன்தினம் உணவகம்,டீக்கடை,பேக்கரி உள்ளிட்ட கடைகளில் அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். அதில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் சுமார் 16 கிலோவை அதிகாரிகள் பறிமுதல் செய்து ,5 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ 3 ஆயிரம் அபதாரம் விதித்தனர். பேக்கரியில் அதிக வண்ணம் கலந்த காலாவதியான சுவீட்கள் சுமார் 7 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அளித்தனர். அதிக வர்ணம் சேர்க்க கூடாது என 7 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டன. உணவகத்தில் 5 கிலோ எடையுள்ள பழைய புரோட்டாவை பறிமுதல் செய்தனர். மேலும் உணவகங்களில் சோதனை செய்த அதிகாரிகள் சமையல் அறைகளில் சோதனை செய்தனர். உள்பகுதியில் உள்ள மேஜைகள் தூசுபடிந்து அசுத்தமாக உள்ள பகுதிகளை ஒரு வாரகாலத்திற்க்குள் சுத்தப்படுத்த வேண்டும் எனவும் சுத்தப்படுத்தாத பட்சத்தில் கடுமையான அபதாரம் விதிக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி