இராமநாதபுரம்: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 24.05.2021 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களும், உணவுப் பொட்டலங்களும் காவல்துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று 02.06.2021-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சக்கரைக்கோட்டை பகுதியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்,IPS., அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி, அரிசி உள்பட மளிகை பொருட்களை நிவாரணமாக வழங்கினார்கள். நிவாரணம் வழங்க உதவிய சக்கரைக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவி திருமதி.ராமலெட்சுமி மூக்கன் அவர்களுக்கு, காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திரு.வெள்ளதுரை, துணைக் காவல் கண்காணிப்பாளர், இராமநாதபுரம் உட்கோட்டம், திரு.ராஜா, துணைக் காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி), திரு.மலைச்சாமி, ஆய்வாளர், கேணிக்கரை, திரு.ஜோதிமுருகன், சார்பு ஆய்வாளர், கேணிக்கரை மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.