நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளிமாநிலத்தவர்கள் பல்வேறு இடங்களில் தங்கி வேலை பார்த்து வந்தனர் அவர்கள் அரசு அமல்படுத்திய ஊரடங்கு தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர் இந்நிலையில் பீகார் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர் இதனையடுத்து வெளிமாநில தொழிலாளர்கள் முழுமையாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது பின்னர் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக நாமக்கல் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர் அங்கிருந்து சிறப்பு ரயில்கள் மூலம் பீகார் மாநில தொழிலாளர்கள் உட்பட மொத்தம் ஆயிரத்து 464 பேரை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரசு அவர்கள் உணவுப் பொருட்கள் வழங்கி வழியனுப்பி வைத்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை