உணவில் வாழைப் பூவை சேர்ப்பதால் கிடக்கும் பயன்கள் : வாழைப் பூவில் விட்டமின்கள் , ஃப்ளேவனாய்ட்ஸ் , புரோட்டீன் நிறைந்துள்ளது . பரம்பரை மருத்துவத்தில் ஆஸ்துமா நோயைப் போக்கவும் , நெஞ்சுச் சளியைப் போக்கவும் , மலச்சிக்கலை தணிக்கவும் , குடல் புண்களை ஆற்றவும், பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து , இரத்தம் வேகமாகச் செல்லும் . மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும் . இதனால் இரத்த அழுத்தம் , இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் .
இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது . இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும் , மன உளைச்சலாலும், வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது . இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில், சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும் . செரிமானத்தன்மை அதிகரிக்கும் .
மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் , உள்மூலம் , வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம் . வாழைப்பூ மூலக்கடுப்பு , இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு , அல்லது இரத்த போக்கின்மை , வெள்ளைப்படுதல், போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில், சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.