கோவை: கோவை மாநகர், சிங்காநல்லூர் காவல் நிலைய சரகம், ஒண்டிபுதூர் நெல்லை கண்ணன் ஸ்வீட் கடை அருகே, சுமார் 20 திருநங்கைகள் தங்களுக்கு போதிய வேலைக்கு செல்ல முடியாத காரணத்தினால், அன்றாட உணவு வேண்டி இருப்பது, தெரிந்தது மேற்படி, 20 பேருக்கு, கோவை மாநகர காவல்துறை உதவி ஆணையர் கிழக்கு திரு.சோமசுந்தரம், சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.முனீஸ்வரன், உதவி ஆய்வாளர்கள் அர்ஜுன் குமார், காசி பாண்டியன், முருகன் மற்றும் காவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆத்மா அறக்கட்டளை உதவியுடன் அவர்களுக்கு 10 நாட்களுக்கு தேவையான அரிசி பருப்பு காய்கறிகள் ஆகியவை கொடுக்கப்பட்டது. மேலும் corona வைரஸ் நோய் தொடர்பாக பாதுகாப்பாக, இருப்பது தொடர்பாக அறிவுரைகளை வழங்கினார். மேலும் அவர்களுக்கு கிருமி நாசினிகள் மற்றும் முகத்துக்கு அணிவதற்காக மாஸ்க் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் இருக்கும் இடங்களில் பின்பற்ற வேண்டிய சமூக இடைவெளி குறித்தும் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்