சென்னை: உணவின்றி இருந்த சாலையோர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 150 க்கும் அதிகமான நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கில் இருந்து, சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து இருந்தாலும், சாலையோரம் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை. அவர்கள் அன்றாட உணவிற்கே தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று வெள்ளிக்கிழமை காலை உணவாக இட்லி, பொங்கல் ஆகியவற்றை போரூர், லக்ஷ்மி நகர், வளசரவாக்கம், ஆழ்வார், திருநகர், விருகம்பாக்கம் மற்றும் கேகே நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் அவர்களை சமூக இயக்கம் இந்த சமூக இடைவெளி கடைபிடிக்க செய்து கைகளை சுத்தம் செய்து முக கவசம் வழங்கி உணவு பரிமாறப்பட்டது உணவினை பெற்றுக்கொண்ட மக்கள் வயிறார பசியாறி மனதார வாழ்த்தி சென்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் சொல்லிற்கிணங்க, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.