இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில் அருகே அமைந்துள்ள தனியார் உணவகம் ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில் உணவகம் அருகே அமைந்துள்ள போத்தார் சத்திரம் சோதனைச்சாவடியில் பணியிலிருந்த த.சி.கா 6-வது அணியைச் சேர்ந்த காவலர் திரு.ரஜினி முத்து அவர்கள் விரைந்து செயல்பட்டு,
அருகாமையில் அமைந்துள்ள ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள தீ அணைக்கும் கருவியை எடுத்து, தனி ஒரு நபராக தீயை அணைத்து உணவகம் மற்றும் அங்கிருந்த பொதுமக்களை பெரும் சேதத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார்.
விரைந்து செயல்பட்டு தீ விபத்தை தடுத்த காவலரின் நற்செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை