திருவாரூர்: உடல்நலம் பாதிக்கப்பட்ட காவலர்களை மீட்டு மீண்டும் காவல் பணியை சிறப்பாக செய்ய வைக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின்பேரில் 11- காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட அனைவரையும் இன்று (30.06.21) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து உற்சாகப்படுத்தி உறுதிமொழி ஏற்கச்செய்து திருவாரூர் காட்டூரில் இயங்கும் பாரதி புத்தாக்க பயிற்சி மையத்திற்கு ஒருமாத கால பயிற்சிக்கு அனுப்பிவைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் போது பாரதி புத்தாக்க பயிற்சி நிறுவனத்தின் திட்ட இயக்குனர் திரு.கார்த்திகேயன் அவர்கள் அனைவருக்கும் பயிற்சி குறித்த பலன்கள்,நடைமுறைகள் ஆகியவற்றை விளக்கினார்கள்.