திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் அறிவுரைப்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினருக்கு மன வலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில் தியான பயிற்சி, மூச்சு பயிற்சி,ஆசனப் பயிற்சி பயிற்றுவிக்கப்பட்டது.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜோசப் அருண் குமார்