மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு. மக்கள் உண்ணும் உணவும் உணவுப் பழக்கவழக்கங்களுமே அவர்களது உடல் நலத்தைத் தீர்மானிக்கின்றன. ஆனால் இன்று பெரும்பாலானோர் காலை உணவை சாப்பிடாமல், தவிர்த்து வருகின்றனர் என்பது ஆய்வில் தெரியவருகின்றது.
தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாகக் கருதப்படுகிறது. இயற்கை உணவுமுறையினையும், இயற்கையோடு இயைந்த பழக்க வழக்கங்களையும், கடைப்பிடிப்பதன்மூலம் உடல் நலத்தையும், உடல் நலத்தையும் பாதுகாக்க முடியும் என மருத்துவர் பரிந்துரைக்கின்றனர்.
நமது உடலில் இரத்தத்தை உற்பத்தி செய்வதில் இட்லி பெரும் பங்கு வகிக்கிறது. நமது உடலுக்குத் தேவையான சத்துக்களை கொடுப்பது மட்டுமின்றி நமது தசைகளையும் வலிமையாக வைத்துக் கொள்கிறது.இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். சமீபத்திய ஆய்வு ஒன்றில், இட்லி இரண்டு மடங்கு சத்துக்கள் நிறைந்த ஓர் சிறந்த உணவு என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் இல்லாமலும் உள்ளது. காலை வேளையில் உணவாக எடுத்து வந்தால், நாள் முழுவதும் உடல் வலிமையுடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட முடியும்.
வேக வைக்கும் முறையில் சமைக்கப்படும் இட்லியில் கொழுப்புக்கள் சுத்தமாக இருக்காது. உடலினுள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள செல்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்னும் அமினோ அமிலாம் இட்லியில் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.
சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் 10 மடங்கு அதிகமாக இட்லியில் உள்ளது. நமது வயிற்றில் உள்ள புண்கள் சரிசெய்யும் மற்றும் நன்கு செரிமான ஆக இட்லி பெரிதும் உதவுகிறது.
போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாரந்தோறும் நடைபெற்றுவரும் உணவு வழங்கும் நிகழ்ச்சியில், உணவுடன் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு, காலை உணவாக இட்லி, பொங்கல் உள்ளிட்டவை வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், கே .கே. நகர், போரூர் சுற்று வட்டாரப்பகுதிகளில், உணவின்றி இருந்த, ஆதரவு அற்றவர்களுக்கு, கிருமி நாசினி உபயோகப்படுத்தி கைகளைக் கழுவி, சமூக இடைவெளியை ஏற்படுத்தி, முகக் கவசம் அளித்து, சாலைப்பகுதிகளில் வசிக்கும் சாலையோர மக்கள் 250 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் ஏற்பாட்டின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர்.