நோயில்லாமல் உயிர்காக்கும் அற்புத ஜீஸ், இந்த ஜூஸ் புற்றுநோயாளிகளின் நம்பிக்கையாக மாறும். `நுரையீரல் புற்றுநோய் இருப்பவர்கள், தினமும் ஒருவேளை என மூன்று மாதம் தவறாமல் குடிக்க வேண்டும். புற்றுநோயின் வீரியத்தைக் குறைக்கும் சக்தி இதற்கு உண்டு. குறிப்பாக, நுரையீரல் புற்றுநோய் மற்றும் வயதாவதால் ஏற்படக்கூடிய நோய்களுக்கு இந்த ஜூஸ் சிறந்தது. கார்சினோமா (Carcinoma) என்கிற ஒருவகை புற்றுநோயின் வீரியத்தைக் குறைக்க இது உதவுகிறது. இதில் இரண்டு காய்கறிகள் மற்றும் ஒரு கனி இருப்பதால், ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றன. அதாவது உயிர்காக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, ஃபோலேட்(பி9), நியாசின் (பி3), சி, இ, கே, துத்தநாகம், மக்னீஷியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், செலினியம், இரும்புச்சத்து, சோடியம், தாமிரம், பீட்டாகரோட்டின் ஆகியவை இதில் உள்ளன. மேலும், இது மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.
இதயம் மற்றும் நுரையீரலை பலப்படுத்தும். மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். அதேசமயம், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். பரு, கரும்புள்ளிகள், கருவளையம், சருமச் சுருக்கங்கள் போன்ற சருமம் தொடர்பான பிரச்னைகளைப் போக்கும். இது ஒரு ‘ஸ்கின் டானிக்’காகச் செயல்படும். அல்சர் பிரச்னை வராமல், வயிற்றைக் காக்கும். வாய்வுக்கோளாறுகளை தடுக்கும். நீண்டகாலமாக இருக்கும் மலச்சிக்கலைப் போக்கும். பார்வைத்திறன் அதிகரிக்க உதவும். கண் எரிச்சல் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அலர்ஜி தொல்லைகளிலிருந்து காக்கும். இதை டீடாக்ஸ் ஜூஸ் என்றும் சொல்லலாம். ரத்தத்தை சுத்திகரிக்கும். ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும். மூளைக்கு எனர்ஜி தரும் பானமாக மாறுவதால், மூளையின் செயல்பாடு சீராகும். நினைவுத்திறன் மேம்படும். உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு, இந்த ஜூஸ் நல்ல தேர்வு. அதாவது கலோரிகள் குறைவு, நிறைவான எனர்ஜியைத் தரக்கூடியது. எடைக்குறைப்புக்கு பெஸ்ட் ஜூஸ்.
எப்படித் தயாரிப்பது :பீட்ரூட் – 1 (சிறியது),கேரட் – 2 (நடுத்தர அளவு), ஆப்பிள் -1. இவை மூன்றையும் தோல் நீக்கிய பின், சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் அரைத்து வடிகட்டாமல் அப்படியே ஜூஸாகக் குடிக்கலாம். சுவைக்கு, 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, இரண்டு புதினா சேர்த்துக்கொள்ளலாம். இதை வெறும் வயிற்றில் குடிப்பது சிறப்பு. அல்லது காலை உணவுக்கு பிறகு, ஒரு மணி நேரம் கழித்து குடிக்கலாம். புற்றுநோயாளிகள், காலை, மாலை என இருவேளையும் மூன்று மாதங்களுக்கு குடித்து வர மாற்றங்கள் விரைவில் தெரியும். அனைவருமே இதை தினமும் டயட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது.