விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தின் தலைமை காவலரான கலங்கா பேரி பகுதியைச் சேர்ந்த அய்யனார் பணியாற்றி வருகிறார்.கடந்த ஒரு வாரமாக கொரோனா அறிகுறியுடன் காணப்பட்ட இவர், தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் காவலர் உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளது. இதையடுத்து, சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, காவலர்கள் அனைவரும் வெளியில் அமர்ந்து பணியாற்றி வருகின்றனர்.