சேலம் : சேலம் கடந்த (06/05/2023), தேதி அதிகாலை 4:00 மணி அளவில் ஓமலூர் உட்கோட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜோடுகுழி பேருந்து நிருத்தம் அருகில் உள்ள இந்தியன் ATM மை வெல்டிங் மிஷின் வைத்து திருட முயற்சி செய்தபோது அக்காட்டிடத்தின் உரிமையாளர் திரு.செல்வம் என்பவர் தகவல் தெரிந்து வந்து பார்த்தபோது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மேலும் திருட முயற்சி செய்து கொண்டிருந்த இரண்டு நபர்களை சமயோசிதமாக செயல்பட்டு வெளிப்புறமாக ஏ.டி.எம் ஷட்டரை பூட்டி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அப்போது உள்ளே இருந்த குற்றவாளிகள் வெல்டிங் மிஷின் மூலம் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது மேற்படி செல்வம் சாதுரியமாகவும் தைரியமாகவும் வெளியில் இருந்து தண்ணீரை ஊற்றி குற்றவாளிகள் வெளியில் வராதவாறு தடுத்துள்ளார். பின்னர் தகவலின் பெயரில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு மற்றும் இரவு வந்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு குற்றவாளிகளை கைது செய்தனர்.
பின்னர் தப்பி ஓடிய குற்றவாளி பற்றி விசாரணை செய்ததில் வெளி மாநில லாரியில் தப்பி செல்வதாக கிடைத்த தகவலின் பெயரிலும் அலைபேசி எண்களின் இருப்பிடத்தை வைத்து பிடிக்கப்பட்டார். மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் மூவரையும் கைது செய்து லாரியை பறிமுதல் செய்து ஏடிஎம் கொள்ளை தடுத்துள்ளனர். சதுரமாகவும் தைரியமாகவும் செயல்பட்ட திரு.செல்வம் என்பவரை தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் படைத்தலைவர் டி.ஜி.பி திரு.சைலேந்திரபாபு அவர்கள் (8/5/2023)ஆம் தேதி நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதிகள் வழங்கினார். மேலும் துரிதமாக செயல்பட்ட திரு.ஆனந்தகுமார் காவல் ஆய்வாளர் தீவட்டிப்பட்டி காவல் நிலையம் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.ரவிச்சந்திரன் திரு.பிரபாகரன் திரு.சங்கர் மற்றும் முதல்நிலை காவலர்கள் திரு.இந்துராஜ் திரு.பாலகுமாரன் ஆகியோர்களை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதிகள் வழங்கினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்