மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த வீரணன் என்பவர் இரவு ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் இரவு பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, குஞ்சாம்பட்டி அருகே எதிரே வந்த தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வீரணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜஸ்டின் சரவணன்















