மதுரை : மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக தேனியில் நடைபெறும் விழாவிற்கு செல்லும் முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின், உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பல்வேறு அரசு திட்டங்களை, தொடங்கி வைக்கிறார் .
இதற்காக, மதுரையிலிருந்து தேனிக்கு புறப்பட்டுச் சென்றார்.
அப்போது, மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு ,திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பதிவேடுகள் பார்வையிட்ட பின், தேனிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக, ஆண்டிபட்டி காவலர் குடியிருப்பில் குறைகளை கேட்டறிந்தார் .
அப்போது, காவல் துறை இயக்குனர் திரு. சைலேந்திரபாபு உடனிருந்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி