திருவள்ளூர் : மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சீரிய திட்டமான “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் காவலரின் நலன் காக்க மாவட்ட மண்டல அளவில் குறைகள் கேட்கப்பட்டு காவல்துறை தலைமை இயக்குனர் திரு.சைலேந்திரபாபு ஐபிஎ
அவர்கள் அளவில் தீர்க்கப்பட வேண்டிய பணி மாறுதல்
தொடர்பான மனுக்களை பரிசீலனை செய்து 1353 காவலர்களுக்கு அவர்கள் விருப்பத்தின்படி பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
இதில் சென்னைக்கு சுய விருப்பத்தின்படி பணிமாறுதல் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் 260 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 149 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 99 பேரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 96 பேரும், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 86 பேரும், நாமக்கல் மாவட்டத்திற்கு 72 பேரும், சிவகங்கை மாவட்டத்திற்கு 68 பேரும், அடங்கும்.
மேலும் காவல்துறை தலைமை இயக்குனர் திரு.சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களால் சென்னை வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் 3- 12- 2021 அன்று நடைபெற்ற வடக்கு மண்டல மாவட்டங்களுக்கான குறைதீர்ப்பு மனு நாளில் 300 மனுக்கள் மற்றும் 8-12-2021 அன்று காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற சென்னை மாநகர் மற்றும் சிறப்புப் பிரிவுகளுக்கான குறைதீர்வு நாள் கூட்டத்தில் 760 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது.
இதன் அடுத்த கட்டமாக 15- 2- 2021 அன்று காலை திருச்சியிலும், மாலை மதுரையிலும் மற்றும் 17- 12-2021 அன்று கோவையிலும், காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களால் காவலர் குறை தீர்ப்பு நாள் மனுக்கள் பெரும் நிகழ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை