இராமநாதபுரம்: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவுப்படி “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையில் காவலர் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.
அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (30.09.2021) மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறை ஆளினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான குறை தீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற இந்த குறை தீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை, அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகள் ஆகியவற்றில் பணியாற்றி வரும் அனைத்து காவல் ஆளினர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் வரை மொத்தம் 69 பேர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்கள்.