தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பொது மக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் விரைவில் கிடைக்க அரசால் துவங்கப்பட்டுள்ள தலையாய திட்டங்களில் ஒன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் ஒட்டு மொத்த மாவட்ட நிர்வாகமும் மாவட்டத்தின் முக்கிய பகுதியில் தங்கி அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைகிறதா என உறுதி செய்யும் விதமாக தென்காசி *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. அரவிந்த் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். பின்பு சங்கரன்கோவில் ஜெய் சாந்தி மகாலில் வைத்து *மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப.,* அவர்கள் தலைமையில் பொது மக்களின் புகார்கள் மற்றும் குறைகளை மனுவாக பெற்று அதை விரைவாக நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டது.