ஈஷா யோக மையத்தில் கல்லூரி மாணவர் கைது

கோவை:  கோவை அருகே உள்ள ஆதியோகி ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .இதில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் பங்குகொண்டனர்

.இந்த விழாவில் கலந்துகொண்ட 4 பேரிடம் செல்போன் திருட்டு போனது அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர் சரண் கூட்டத்தில் செல்போன் திருடிய ஒருவரைகையும் களவுமாக பிடித்தார் .பின்னர் அவர் ஆலந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் செல் போன் திருடியவர் மேட்டுப்பாளையம் வினோபாஜி நகரைச் சேர்ந்த அழகேசன் மகன் ராஜேஸ் ( வயது 20) என்பது தெரியவந்தது. இவர் காரமடையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரிடமிருந்து 4 செல்போன் மீட்கப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.