ஈரோடு: ஈரோடு மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேஷ், IPS உத்தரவின்படி, கோபி செட்டிபாளையம் மதுவிலக்கு காவல்துறையினர் கடம்பூர் குஜில் கரை பகுதிக்கு ரோந்து சென்றனர் . அப்போர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்ததில், அவரது கைப்பையில் 80 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருந்தது. விசாரணையில், கடம்பூர் குஞ்சில் கரையைச் சேர்ந்த கோபால்(48) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர்.