ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் போலீஸ் வாகனம் கல்வீசி தாக்கப்பட்டதால் பதற்றம் நிலவிவருகின்றது. திருமாவளவன் கோபிச்செட்டிபாளையம் வருவதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோபிச்செட்டிபாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்து அழைத்து செல்ல போலீசார் வாகனத்தை எடுத்து வந்தனர். போலீஸ் வாகனம் வந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலின் போது போலீஸ் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. போலீஸார் மிகுந்த சிரமத்திற்கிடையே கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா