ஈரோடு : சூளை ஈ.பி.பி. நகர் பி.பி. கார்டன் பகுதியை சேர்ந்த சுரேஷ் (40), தனியார் நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி, சாந்தி என்கிற புவனேஸ்வரி (38), 2 ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்த வாலிபருடன், பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த சுரேஷ், புவனேஸ்வரியை கண்டித்துள்ளார். கள்ளக்காதலை கைவிடாததால், 6 மாதங்களுக்கு முன்பு சுரேஷ், மனைவியை பிரிந்து, தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், புவனேஸ்வரியின் குழந்தைகள் அதேபகுதியில் வசிக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்றனர்.
வீட்டில் தனியாக இருந்த புவனேஸ்வரி, கழுத்தில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைபார்த்து, அக்கம் பக்கத்தினர், இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் , காவலருக்கு
தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவலர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், புவனேஸ்வரி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. கள்ளக்காதலனான பெயிண்டர் ஆகியோரை காவலர், பிடித்து விசாரணை நடத்தினர். இதில், புவனேஸ்வரியின் கழுத்தை ஓயரால் இறுக்கி கொலை செய்ததை, அவருடைய கணவர் சுரேஷ், ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து காவலர், சுரேசை கைது செய்தனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :