ஈரோடு: ஈரோடு மாவட்டம் நகர உட்கோட்ட பகுதியில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் குஜராத் மாநிலத்திலிருந்து தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்திருக்கும் குஜராத் மாநில காவல்துறையினர் இணைந்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு.ஜவகர் இ.கா.ப., அவர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.