ஈரோடு: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக 2018-ஆம் ஆண்டு பேட்ச் IPS அதிகாரியான கிரண் சுருதி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் சீராகவும், அமைதியான சூழலிலும் நடைபெற தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பொறுப்பு புதிய காவல் கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணித்து, எந்தவித சட்டவிரோத செயல்களும் நடைபெறாமல் தடுக்க காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

N.செந்தில்குமார்
















