ஈரோடு: தற்போது ஈரோடு பகுதியில் கரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் நேற்று 2-வது நாளாக வீரப்பன்சத்திரம் போலீஸார், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து ஆய்வு நடத்தினர் இந்த மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து காய்கறிகளை மொத்தமாகவும்,சில்லறையாகவும் வாங்கிச் செல்கின்றனர் ப்போது முகக் கவசம் அணியாமல் வந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் தனி மனித சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மார்க்கெட் நுழைவு பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.