ஈரோடு : “வருமுன் காப்போம்” என்னும் புது மொழிக்கு இணங்க நோய்த்தொற்று வருவதற்கு முன்பு, நம்மை பாதுகாத்துக்கொள்ள போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, இந்தியாவில் கொரானா நோய் தொற்று பரவ ஆரம்பித்த மார்ச் மாதத்திலிருந்து தமிழகமெங்கும் கபசுர குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிகம் பரவிய சென்னை பெருநகரில் நோய்த் தொற்று பரவும் இடங்களில் கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள மக்களுக்கு, முகக் கவசங்கள் மற்றும் கபசுர குடிநீர் சுமார் 1000 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சுப்பையா துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் திரு.பி. மோகன் ராஜ் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கேஆர் வெல்பர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் திரு.காதர், திரு.ராகுல் ராம்தாஸ் மற்றும் மேலாளர் திரு.உமர் பாரூக் ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர்.