ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் அற்பணிப்பு பீட் ( டெடிகேட் பீட் ) என்கிற போலீஸ் பீட், புதிய பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேசன் ஐபிஎஸ் அவர்கள் தொடங்கி வைத்தார்.
அற்பணிப்பு பீட் (Dedicate Peet)
இதுகுறித்து ஈரோடு எஸ்பி சக்திகணேசன் கூறும்போது, ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி ஆகிய ஐந்து உட் கோட்டத்தில் ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களின் பிரச்சினையை, அதற்குண்டான தீர்வு என்ன என்பதை மக்களுக்கு எடுத்துக் கூறி, அவர்களுடன் நல்லுறவை மேற்கொள்ள இத்திட்டம் உதவும்.
ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் 3 போலீசார் என மொத்தம் 54 பேர் ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். அவர்கள் அந்த காவல் நிலைய, எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் பிரச்னை, சாலை வசதி முதல் குடிநீர் பிரச்சனை வரை அதற்கான உண்டான தீர்வு என்ன என்பதையும் மக்களிடம் எடுத்து சொல்வார்.
மேலும், அந்த பகுதிகளில் உள்ள பழைய குற்றவாளிகள் யார்? அவர்கள் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதா? மக்களுக்கு இடையூறு செய்யும் ரவுடிகள் உள்ளார்களா என்பதை முன்பே அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த காவல்துறையினர் மக்களிடம் உறவு போல் நெருங்கி பழகி, அவர்களுக்கு நன்கு தெரிந்த நண்பர் போல இருக்க வேண்டும். இதனால், காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இனக்கமான நல்லுறவு மேம்படும், குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறையும் என நம்புகிறோம்.’ என்றார்.
‘ஹலோசீனியர்ஸ்’ திட்டம் ( Hello Seniors)
வயதானவர்கள், பெற்றெடுத்த வாரிசுகளால் தனித்து விடப்பட்டவர்கள், கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுபவர்கள் நேரிடையாக காவல் நிலையம் போய் புகார் கொடுக்க வேண்டியதில்லை. ஒரு போன் செய்தால் போதும். ‘ஹலோசீனியர்ஸ்’ என்ற இந்த திட்டத்தின்படி, அவர்கள் இருக்கும் இடத்திற்கே காவல்துறையினர் சென்று பிரச்சனைக்கு தீர்வு காண்பார்கள்.
‘லேடீஸ் ஃபஸ்ட்’ திட்டம் (Ladies First)
ஏதாவது வகையில் பாதிக்கப்படும் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை ஒரு போன் செய்தால் போதும்இ மகளிர் காவல்துறையினர் அவர்கள் இருப்பிடத்திற்கு நேரில் சென்று தீர்வு காண்பதோடு பெண்கள் பிரச்சனையில் ரகசியமும் காக்கப்பட்டு வருகிறது.
‘எக்ஸ்பிரஸ் ஃபிரி வே’ திட்டம் (Express Free Way)
இது 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை கொண்டு வரும் போது, விரைவாக மருத்துவமனை செல்ல அவ்வழியில் உள்ள ட்ராபிக் காவல்துறையினருக்கு தகவல் அனுப்பி சாலையில் ட்ராபிக் ஏற்படாமல் வைத்திருப்பது.
ஈரோடு மாவட்டத்திற்கு காவல்துறை எஸ்.பி.யாக சக்திகணேசன் பொறுப்பேற்ற இந்த ஒரு வருடத்தில் காவல்துறை பணிகளை கடந்து பொது மக்களுக்கான நற்செயல்களிலும் காவல்துறையினரை ஈடுபடுத்தி வருகிறார். இது பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது.
காவல்துறையில் புதுமைகளை புகுத்திவரும் காவல் கண்காணிப்பாளர், இளம் ஐ.பி.எஸ் அதிகாரியான திரு.சக்தி கணேசன் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்