ஈரோடு : கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக, ஈரோடு டவுன் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டத்தில் நோய்த் தொற்றால் இதுவரை 11,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 தாண்டிவிட்டது. நோய் தொற்றால் ஈரோடு மாவட்டத்தில் 90 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த கிரைம் காவல் உதவி ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் (56) கடந்த மாதம் 17ஆம் தேதி ஒரு நாள் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையிலும் , பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் இன்ஜினீயரிங் பட்டதாரி. ரவிச்சந்திரனின் சொந்த ஊர், பரமக்குடி. ஈரோடு பெரியண்ணன் வீதியில் வசித்து வந்தார்.
1985 இல் காவல் பணியில் சேர்ந்த இவர், படிப்படியாக பதவி உயர்வு பெற்று காவல் உதவி ஆய்வாளர் ஆனார். ஈரோடு மாவட்டத்தில் கொரானாவிற்கு பலியான முதல் காவலர் இவர். அவரது மறைவு ஈரோடு மாவட்ட காவல்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா