பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் வாகனங்கள் சுற்றி வருகின்றனர். இதனை பார்த்த காவல்துறையினர் தேவையின்றி முக்கிய காரணங்களில் இல்லாமல் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வருபவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து வழக்குபதிந்து வருகின்றனர்.
மேலும் காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடம் அத்தியாவசி தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள், தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என அறிவுரை கூறி அனுப்பிவருகின்றனர்.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வது, காவல் நிலைய எல்லைகளை விட்டு வேறு ஊர்களுக்கு செல்லும்போது ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பெரம்பலூர் மாவட்ட எல்லைகளில் போலீசார் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் சாலைகளில் நடுவே பேரிகார்டு போட்டு வாகனத்தை தடுத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்,
அப்போது இ பதிவு இல்லாமல் வரும் வெளிமாவட்டத்தை சேர்ந்த வாகன ஓட்டிகளிடமிருந்து வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்து வருகின்றனர். இதன்படி இன்று காலை முதல் 25க்கு மேற்பட்ட டூவிலர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.