மதுரை: மதுரை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில் மேலூர் நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பிஜேபியை சேர்ந்த வேட்பாளர் அம்சவேணி, மேலூர் என்பவர் போட்டியிடுகிறார்.
அவருக்கு வாக்குச்சாவடி முகவராக அவருடைய மகன் கிரி நந்தன் 43. என்பவர் வாக்குச்சாவடி எண் 27 அல்-அமீன் பள்ளியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனை அடுத்து, அங்கு வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண் வாக்காளரின் முகத்திரையை (ஹிஜாப்) விலக்கக் கோரி பிரச்சனையை எழுப்பியுள்ளார். உடனடியாக, அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் அவரை வெளியேற்ற உத்தரவிட்டனர். அதனடிப்படையில், அவரது கட்சி நிர்வாகிகள் அவரை பணியில் இருந்து விடுவித்து வேறு ஒருவரை வாக்குச்சாவடி முகவராக நியமித்தனர்.
மேலும், மேற்படி அங்கு பணியில் இருந்த தேர்தல் அலுவலர் கொடுத்த புகாரின் பெயரில், மேற்படி, கிரி நந்தன் என்பவரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கிரி நந்தன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்பு, மேற்படி கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த கணம் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, வரும் 4.3.22 ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி